3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் பிடிஎஸ் புதிய ஆல்பம்

பிடிஎஸ் குழுவினரின் புதிய ஆல்பம் மார்ச் 20ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-01 21:45 IST

இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் பிடிஎஸ்-ம் ஒன்று. இளைஞர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும்படியான வரிகளை தங்களது பாடல்களில் புகுத்தியதன் மூலம் உலகம் முழுவதும் பிடிஎஸ் குழு பிரபலமடைந்தனர். அவர்களின் தோற்றமும், பாடல்களும், இசையும் உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றது. 

தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு பணியாற்ற வேண்டும். இதில் கே-பாப் கலைஞர்களும் விதிவிலக்கல்ல. அதன்படி பிடிஎஸ் உறுப்பினர்களும் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஜின், ஜே-ஹோப், ஆர்எம், வி , ஜிமின், ஜங்கூக் மற்றும் சுகா ஆகியோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராணுவ பணியை நிறைவு செய்து மீண்டும் பிடிஎஸ் இசைக்குழுவில் இணைந்துள்ளனர்.

கடைசியாக பிடிஎஸ் குழுவினர் 2022-ல் ‘ப்ரூப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்கள். தற்போது மார்ச் 20ம் தேதி தங்களது புதிய ஆல்பம் வெளியாகுமென அறிவித்துள்ளனர். இந்தக் குழுவில் மொத்தமாக 7 நபர்கள் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்