சமந்தாவின் சாகுந்தலம்; வசூலில் தோல்வி பற்றி சக நடிகை மதுபாலா பேட்டி

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் படம் வசூலில் தோல்வி அடைந்தது பற்றி சக நடிகை மதுபாலா பேட்டி அளித்து உள்ளார்.

Update: 2023-04-26 18:14 GMT

சென்னை,

நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் சாகுந்தலம். குணசேகர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய வேடமேற்று உள்ளார்.

அதிதிபாலன், கவுதமி, மதுபாலா, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், வசூல்ரீதியாக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டு உள்ளது.

இந்த படத்தில் மேனகாவாக வேடமேற்று, நடிகை மதுபாலா நடித்து உள்ளார். படம் பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலிககாத நிலையில், அதுபற்றி நடிகை மதுபாலா பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

 

அவர் கூறும்போது, பாக்ஸ் ஆபீசில் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாதது தனக்கு மனதளவில் வேதனை ஏற்பட்டு உள்ளது என கூறியதுடன், படத்திற்காக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதிக உழைப்பை கொடுத்தனர் என கூறியுள்ளார்.

படம் உருவானதில் இருந்து, திரைக்கு வரும் வரை அவர்கள் தங்கள் உழைப்பை அதில் போட்டனர். படப்பிடிப்பு, டப்பிங் பணிகள் முடிந்த பின்னர் அவர்கள் ஓராண்டு முழுவதும் சி.ஜி.ஐ. எனப்படும் கணினி சார்ந்த பணிகளில் ஈடுபட்டனர்.

ரசிகர்களுக்கு திரையில் படம் நன்றாக வருவதற்கான வேலைகளை உறுதிப்படுத்தினர். படப்பிடிப்பின்போது கூட, கலைஞர்களுக்கோ அல்லது தொழில் நுட்ப பணியாளர்களுக்கோ நான் பார்த்த வரை எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. அவர்கள் எங்களது வசதிகளில் குறைவு ஏற்படாமல் நன்றாக கவனித்து கொண்டனர் என கூறியுள்ளார்.

ஒரு படம் ஏன் வெற்றியடைகிறது என்றோ அல்லது தோல்வி காணுகிறது என்றோ ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது.

சாகுந்தலம், ஒரு வலுவான தென்னிந்திய அம்சங்களை கொண்ட, கற்பனையான விசயங்கள் நிறைந்த படம். பாகுபலி படம் இவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கும் என ஒருவரும் எதிர்பார்க்கவில்லை.

அது நல்ல படம் என்றபோதிலும், இந்த அளவுக்கு சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடையும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவேயில்லை. ஒவ்வொருவரும் இந்த படத்திற்காக உண்மையாக உழைத்தனர். அதனால், படத்தின் தோல்வி வேதனையை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்