துல்கர் சல்மானுக்கு பதில் இவர்....'தக் லைப்' படத்தில் இணையும் முன்னணி நடிகர்

சில தினங்களுக்கு முன்னர் 'தக் லைப்'படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாக தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-03-26 07:43 GMT

imge courtecy:twitter@SilambarasanTR_

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தன. அதன்படி , 'தக் லைப்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மணிரத்னம் செர்பியாவில் முகாமிட்டிருந்தார். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் 'தக் லைப்'படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாக தெரிவிக்கப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தக் லைப் படத்திலிருந்து விலகிய நடிகர் துல்கர் சல்மானுக்கு பதிலாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக 'தக் லைப்' படத்தில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்