நானி நடித்துள்ள 'தசரா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

நானி நடித்துள்ள 'தசரா' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2023-01-26 08:43 GMT

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, 'அடடே சுந்தரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், 'தசரா' படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் வருகிற 30-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை நடிகர் நானி தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்