'கொக்கி குமார்' கதாபாத்திரம் ஒரு எமோஷன்... தனுஷ் நெகிழ்ச்சி பதிவு

'புதுப்பேட்டை' திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவான நிலையில், நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Update: 2024-05-27 03:09 GMT

சென்னை,

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு, மே 26-ம் தேதி வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருந்த இந்த படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி நேற்றோடு 18 ஆண்டுகள் நிறைவான நிலையில், நடிகர் தனுஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு நடிகருக்கு திரை பயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் அழுத்தமானதாக அமையும். அதுபோன்ற கதாபாத்திரம்தான் கொக்கி குமார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த செல்வராகவனுக்கு நன்றி. நான் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். கொக்கி குமார் கதாபாத்திரம் ஒரு எமோஷன்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது தனது 50-வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'ராயன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற ஜூன் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்