ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகிய ஜான்வி கபூரின் "ஹோம் பவுண்ட்" திரைப்படம்!

ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் இப்படம் தேர்வாகி உள்ளது.;

Update:2025-12-17 11:21 IST

நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ''ஹோம்பவுண்ட்'. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்தப் படம் சமீபத்தில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது, அங்கும் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், 98-ஆவது ஆஸ்கா் விருது விழா மார்ச் 15, 2026 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்த ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ''ஹோம் பவுண்ட்' என்ற இந்தி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகி உள்ளது. இறுதி நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்