பிரபாஸின் ’தி ராஜாசாப்’ - 2வது பாடல் வெளியீடு

இப்படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.;

Update:2025-12-17 22:49 IST

சென்னை,

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் தி ராஜா சாப். மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 2-வது பாடல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சஹானா சஹானா என்ற இப்பாடலை தீரஜ், தமன் மற்றும் ஸ்ருதி ரஞ்சனி பாடியுள்ளனர்.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்