வைபவ் நடித்துள்ள 'பபூன்' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் வைபவ் நடித்துள்ள 'பபூன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Update: 2022-09-14 16:25 GMT

சென்னை,

அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் 'பபூன்'. இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக நடிகை அனகா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'பபூன்' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்