குறைவாக வசூலித்த படமான 'உலாஜ்' - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜான்வி கபூர் நடித்த 'உலாஜ்' படம் நேற்று வெளியானது.;

Update:2024-08-03 13:55 IST

image courtecy:instagram@janhvikapoor

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தேவரா என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி இருக்கிறார். தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

தற்போது இவர் 'உலாஜ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை, தயாரிப்பாளர் சுதன்ஷு சாரியா இயக்கியுள்ளார். ஜிங்கிலி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் குல்ஷன் தேவையா, ரோஷன் மேத்யூ, ராஜேஷ் தைலாங், மெய்யாங் சாங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் முதல் நாளில் ரூ.1.10 கோடி வசூலித்துள்ளது. இது ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த 2 வருடங்களாக வெளியான படங்களில் முதல் நாளில் மிகவும் குறைவான ரூபாய் வசூலித்த படமாகியுள்ளது.

இதற்கு முன்னதாக ஜான்வி கபூர் நடிப்பில் வெளியானமிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி படம் முதல் நாளில் ரூ. 6.75 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்