விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' படத்தின் புதிய அப்டேட்
'ரோமியோ' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது;
சென்னை,
நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படம் அடுத்த ஆண்டு (2024) கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'ரோமியோ' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
Successfully wrapped up the challenging Tenkasi schedule of #Romeo & #LoveGuru ❤️#SUMMER2024#BLOCKBUSTER@gooddeviloffl @actorvinayak_v @mirnaliniravi pic.twitter.com/4ZxYYtJI0J
— vijayantony (@vijayantony) September 2, 2023