அரண்மனை 4 - தமன்னாவை பாராட்டிய விஜய் வர்மா

கடந்த 3-ம் தேதி அரண்மனை 4 படம் திரையரங்குகளில் வெளியானது.

Update: 2024-05-06 20:15 GMT

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் 'அச்சச்சோ' என்ற முதல் பாடலும் வெளியாகின.

கடந்த 3-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி மூன்று நாட்களில் இப்படம் ரூ.15 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் தமன்னாவின் நடிப்பு சிறப்பானதாக இருந்தது.

இந்நிலையில், தமன்னாவின் காதலன் விஜய் வர்மா தமன்னாவை பாராட்டி இணையத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அரண்மனை 4-ல் உங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு வாழ்த்துகள்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்