2 மணி 20 நிமிடங்கள் ஓடும் ‘வனமகன்’

‘போகன்’ படத்தை அடுத்து ஜெயம் ரவி நடித்து திரைக்கு வர இருக்கும் படம், ‘வனமகன்.’;

Update:2017-05-14 12:09 IST
 இந்த படத்தின் படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகள் நிறைவடைந்து, படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் ஒரு காட்சியை கூட நீக்காமல், ‘யு’ சான்றிதழ் அளித்தார்கள். இதன் மூலம் ‘வனமகன்’ படம் வரிவிலக்குக்கு தகுதி பெற்றுள்ளது.

ஜெயம் ரவியுடன் சாயீஷா, பிரகாஷ்ராஜ், தம்பிராமய்யா, வேலராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை விஜய் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. படம், 2 மணி 20 நிமிடங்கள் ஓடும்!

மேலும் செய்திகள்