தனுஷின் ’இட்லி கடை’ பட டிரெய்லர் அப்டேட்
தனுஷின் ''இட்லி கடை'' படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கும் நான்காவது படமாக ’இட்லி கடை’ உருவாகி இருக்கிறது. நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் பார்த்திபன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் அருண் விஜய், சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களின் கேரக்டர் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அருண் விஜய் அஸ்வினாகவும், சத்யராஜ் விஷ்ணு வர்தனாகவும், ராஜ்கிரண் சிவநேசனாகவும் நடித்திருக்கின்றனர்.
தனுஷின் ''இட்லி கடை'' படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அன்றே இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.