3 கதாநாயகிகளில் ஒருவராக காஜல் அகர்வால்!

விஜய்யுடன் ‘மெர்சல்,’ அஜித்துடன் ‘விவேகம்’ ஆகிய படங்களில் நடித்த காஜல் அகர்வால்.;

Update:2018-03-02 03:45 IST
விஜய்யுடன் ‘மெர்சல்,’ அஜித்துடன் ‘விவேகம்’ ஆகிய படங்களில் நடித்த காஜல் அகர்வால், இந்த 2 படங்களுக்குப்பின் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.

அதனால், நானி தயாரிக்கும் ஒரு தெலுங்கு படத்தில், மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க சம்மதித்து இருக்கிறார். ரெஜினா, நித்யாமேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே அந்த படத்தில் நடித்து வருகிறார்கள்!

மேலும் செய்திகள்