சினிமா துளிகள்
யார் அழகு..?

ரன்பீர் சிங்கும், தீபிகாவும் பல பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு ஒய்யாரமாக நடந்துள்ளனர்.
ரன்பீர், கத்ரீனா கைப்புடனும்  அதேபோல்  ஜோடி சேர்ந்திருக்கிறார். இப்போது இது அல்ல பிரச்சினை. இதில் எந்த ஜோடி சிறந்த ஜோடி என்ற கருத்துக் கணிப்பை இணையதளத்தில் நடத்தி, தீபிகாவின் ரசிகர்களை கதறவிட்டிருக்கிறார்கள்.

ஆம்..! இந்த கருத்துக்கணிப்பு கத்ரீனாவிற்கு சாதகமாக அமைய.... தீபிகாவின் ஜோடி பொருத்தம் சரியில்லை என கருத்துக்கணிப்பு விடையளித்திருக்கிறது.

இதை தீபிகா பெரிதுபடுத்தவில்லை என்றாலும், அவரது ரசிகர்கள் ஊதி பெரிதாக்கி விட்டனர். அதனால் சமூக வலைத்தளங்களில் நீயா..? நானா..? போட்டி நடைபெறுகிறது.