சினிமா துளிகள்
அதிர்ச்சி அளித்த பேய் பட நடிகை!

பேய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அவர்.
 சம்பள விஷயத்தில் கண்டிப்பாக இல்லாமல், கொடுப்பதை வாங்கிக் கொள்பவராகவே இருந்தார். அவர் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம், ரூ.20 லட்சம். இதற்கு முன்பணமாக ஒரு லட்சம் அல்லது 2 லட்சம் வாங்கிக் கொண்டிருந்தார்.

படக்குழுவினருடன் வேறுபாடு பார்க்காமல் தாராள மனப்பான்மையுடன் பழகி வந்த அவருடைய நடவடிக்கையில், திடீர் மாற்றம். சம்பளத்தை ரூ.50 லட்சமாக உயர்த்தி விட்டார். அவரிடம் இருந்த கலகலப்பு, இப்போது காணாமல் போய் விட்டதாம்!