சினிமா துளிகள்
‘யோகி’ நடிகரின் அதிர்ஷ்டம்!

யோகி நடிகரின் காட்டில் அடைமழை பெய்கிறது.
தமிழ் பட உலகில் முன்னணி ‘காமெடி’ நடிகர்களில் சிலர் கதாநாயகனாக நடிக்கப் போய்விட்டதால், ‘யோகி’ நடிகரின் காட்டில் அடைமழை. போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு அவருக்கு புது பட வாய்ப்புகள் வருகின்றன.

அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசுவதால், அவர் நடிக்கிற படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றி பெறுகின்றன. அதைத் தொடர்ந்து ‘யோகி’ தனது சம்பளத்தை சற்றே உயர்த்தியிருப்பதாக கேள்வி!