சினிமா துளிகள்
‘ரன்’ நடிகையின் வருத்தம் நீங்கியது!

‘உச்சநட்சத்திரம்’ நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் போட்டி போட்டார்கள்.
முன்னாள் கதாநாயகிகள், இந்நாள் கதாநாயகிகள் அனைவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார்கள். கடைசியில் வென்றவர், ‘ரன்’ நடிகை!

உச்சநட்சத்திரத்துடன் ஜோடி சேர முடியவில்லையே என்ற அவருடைய நீண்ட நாள் வருத்தம் நீங்கியது. இருவரும் நடித்த காட்சிகள், இமயமலையில் படமாக்கப்பட்டன!