சினிமா துளிகள்
‘தளபதி’ நடிகரின் புதிய படம், ‘ஆளப்போறான் தமிழன்!’

‘லீ’ டைரக்டரின் 2 படங்களில் நடித்த ‘தளபதி’ நடிகர் அடுத்து மூன்றாவதாக அதே டைரக்டரின் படத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
“அவர் எந்த படத்தை வேண்டுமானாலும் காப்பி அடிக்கட்டும். பரவாயில்லை. மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்து விடுகிறார். அதனால் அடுத்த ‘கால்ஷீட்’ அவருக்கே” என்கிறாராம், ‘தளபதி.’

இவர்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படத்துக்கு, ‘ஆளப்போறான் தமிழன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்! சரியான நேரத்தில், சரியான டைட்டில்!