‘அனிருத்’தில், காஜல் அகர்வால்

ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரம்மோற்சவம்’ என்ற தெலுங்கு படத்தை ‘அனிருத்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.;

Update:2018-07-27 04:00 IST
பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பாகுபலி, இதுதாண்டா போலீஸ், மகதீரா, புரூஸ்லீ, எவண்டா உள்பட பல மொழிமாற்று படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அடுத்து ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரம்மோற்சவம்’ என்ற தெலுங்கு படத்தை ‘அனிருத்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து இருக்கிறது. இந்த படத்தில் மகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரேவதி, ஜெயசுதா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

மேலும் செய்திகள்