சினிமா துளிகள்
‘திசை’ படத்துக்கு பாக்யராஜ் பாராட்டு!

‘திசை’ படம் பார்த்த டைரக்டர் பாக்யராஜ், படத்தை பாராட்டியிருக்கிறார்.
டைரக்டர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக பணிபுரிந்த பி.வரதராஜன், ‘திசை’ படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். பவன் கந்தசாமி, ஜி.வி.கே. ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில், கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் பவன் நடிக்க, இரண்டாவது நாயகனாக மயில்சாமியின் மகன் யுவன் நடித்து இருக்கிறார். மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

படத்தை பார்த்து விட்டு டைரக்டர் பாக்யராஜ், ‘‘இதுபோன்ற படங்களுக்குத்தான் விருதுகள் கொடுக்க வேண்டும்’’ என்று பாராட்டியிருக்கிறார்!