சினிமா துளிகள்
ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக...

‘பால்’ நடிகை இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஆடை’ படத்தில், அவருக்கு புரட்சிகரமான வேடம்.
இவரை ஒரு கும்பல் தந்திரமாக வரவழைத்து, ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக, காட்டு பங்களாவுக்குள் அடைத்து விடுகிறார்கள். அந்த அறைக்குள் கிடந்த பழைய பத்திரிகைகளை சேகரித்து, ‘பால்’ தனது உடம்பில் சுற்றிக்கொள்கிறார்.

இந்த பேப்பர் உடையுடன்தான் ‘பால்,’ சமீபத்தில் கவர்ச்சி ‘போஸ்’ கொடுத்தாராம். அந்த காட்டு பங்களாவில் இருந்து அவர் எப்படி தப்புகிறார்? என்பது படத்தின் முக்கிய காட்சியாக வைக்கப்பட்டு இருக் கிறது!