‘அட்டகத்தி’ தினேசுடன் ‘கயல்’ ஆனந்தி இணைந்தார்!
‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தில், அவருடன் ‘கயல்’ ஆனந்தி ஜோடி சேர்ந்தார்.;
இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. டைரக்டர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை டைரக்டு செய்கிறார். பா.ரஞ்சித்தின் சொந்த பட நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ், இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-
‘‘கதைப்படி, கதாநாயகன் தினேஷ், லாரி டிரைவர். அவர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. படம், உலக அரசியல் பேசும். தினேஷ்-கயல் ஆனந்தியுடன் முக்கிய வேடத்தில் ரித்விகா நடிக்கிறார்.
கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, தென்மா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.’’