‘‘நானும் விவசாயியின் மகன்தான்!’’

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அப்புக்குட்டி. தேசிய விருது பெற்றவர், இவர். இருப்பினும் கைவசம் அதிக படங்கள் இல்லை.;

Update:2019-09-08 04:00 IST
அப்புக்குட்டி நடிக்கும் படம் விவசாயிகள் சார்ந்த பிரச்சினையை கருவாக கொண்டது என்பதால் படத்துக்கு, ‘வாழ்க விவசாயி’ என்றே பெயர் வைத்து இருக்கிறார்கள்.

‘‘ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வை படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயியின் மகன்தான். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது, களை பறிப்பது, கதிர் அடிப்பது, அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா விவசாய வேலைகளும் தெரியும். இந்த படம் என்னையும் வாழ வைக்கும்’’ என்கிறார், அப்புக்குட்டி!

மேலும் செய்திகள்