யாஷிகா ஆனந்த் வருத்தம்!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகைகளில், யாஷிகா ஆனந்தும் ஒருவர். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்தார். அந்த படத்தின் மூலம் மேலும் பிரபலமானார்.;

Update:2019-10-06 04:45 IST
படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருவதால், நிஜவாழ்க்கையிலும் அவர் அப்படித்தான் இருப்பார் என்று கருதி, சில ரசிகர்கள் யாஷிகா ஆனந்திடம் எல்லை மீறினார்கள்.

அதற்கு யாஷிகா ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘ஒரு நடிகை படங்களில் கவர்ச்சியாக நடித்தால், நிஜவாழ்க்கையிலும் அப்படியே இருப்பார் என்று நினைக்கிறார்கள். அப்படி தவறாக நினைக்க கூடாது. ரசிகர்களின் எல்லை மீறலுக்கு, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம்தான் காரணம். அந்த படத்தில் ஏன் நடித்தோம்? என்று இப்போது நான் வருத்தப் படுகிறேன்’’ என்கிறார், யாஷிகா ஆனந்த்!

மேலும் செய்திகள்