தமிழ், தெலுங்கு படங்களில் சமுத்திரக்கனியும், ‘அப்பா’ வேடங்களும்...

‘பூவரசம் பீப்பீ’, ‘சில்லு கருப்பட்டி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஹலிதா சமீம்.;

Update:2021-02-13 21:17 IST
இவருடைய இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு, ‘ஏலே’ என்று பெயர் சூட்டி யிருக்கிறார். இது, தந்தை-மகன் உறவை சொல்லும் படம். தந்தையாக சமுத்திரக்கனியும், மகனாக புதுமுகம் மணிகண்டனும் நடித்துள்ளனர். சசிகாந்த் தயாரித்து இருக்கிறார்.

அப்பா வேடத்தில் நடித்தது பற்றி சமுத்திரக்கனி கூறுகிறார்:-

“இது ஒரு வித்தியாசமான அப்பா-மகன் கதை. அப்பாவிடம் வருடக்கணக்கில் பேசாமல் இருக் கிறான், மகன். அப்பா வேடத்தில் ஐஸ் வியாபாரியாக நான் (சமுத்திரக்கனி) நடித்து இருக்கிறேன். ஒரு கட்டத்தில், அப்பா இறந்து விடுகிறார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக வெளி யூரில் இருந்து மகன் வருகிறான். அவனுடைய மனநிலை எப்படி இருக்கும்? என்பதே படம். படப் பிடிப்பு பழனி அருகில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் நடந்து முடிந்தது.பெரும்பாலான படங்களில் எனக்கு அப்பா வேடமே கிடைக்கிறது. சில படங்களில் வில்லன் வேடம் தேடிவருகிறது. தமிழ் படங்களில் என்ன வேடங்கள் வருகிறதோ, அதேபோல்தான் தெலுங்கு படங்களிலும் வருகிறது.அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். அது முடிந்ததும் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறேன்”.

மேலும் செய்திகள்