ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் நடிகர் மரணம்

பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் யாபெட் கோட்டோ மரணம் அடைந்தார்.

Update: 2021-03-18 10:45 GMT
ஹாலிவுட் வில்லன் நடிகர் யாபெட் கோட்டோ
அவருக்கு வயது 81. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வில்லனாக நடித்து யாபெட் கோட்டோ பிரபலமானார். ரோஜர்மூர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த லிவ் அண்ட் லெட் லிவ் படத்தில் மிஸ்டர் பிக் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பேசப்பட்டார். ஏலியன் படத்தில் டென்னிஸ் பார்க்கர் என்ற கதாபாத்திரத்தில் 
வந்தார். அர்னால்டு உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நடிகர்களுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் 1959-ல் ரிட்டா டிட்மேன் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார். 

1975-ல் டோனி பெட்டி என்பவரை 2-வது திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். 3-வதாக டெஸ்சி சிஹாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட யாபெட் கோட்டோ சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்ததாக அவரது மனைவி டெஸ்சி சிஹாகன் முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்