சின்ன கதாநாயகர்களை விட ‘‘கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள்’’; சமந்தா ஆதங்கம்

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, மற்ற கதாநாயகிகளுடன் ஒப்பிடும்போது, ஒளிவு மறைவு இல்லாதவர்.;

Update:2021-03-23 19:42 IST
அவர் கூறியதாவது:-

‘‘சினிமாவில் நடிப்பதற்கு முன்பு எங்கள் குடும்பம், சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தது. ரொம்ப வசதியான குடும்பம் அல்ல. திருமண மண்டபங்களில் வாசலில் நின்றபடி வரவேற்கும் பெண்களில் ஒருத்தியாக இருந்தேன். அதற்கு சம்பளமாக ரூ.1,000 கொடுப்பார்கள்.

பொதுவாகவே எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதற்கு சினிமாவும் விதிவிலக்கு அல்ல. சினிமாவில் கதாநாயகர்களை விட, கதாநாயகிகளுக்கு மிக குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள். சின்ன கதாநாயகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட, பிரபல கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே தருகிறார்கள்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்