கொரோனா 2-வது அலை ஹாலிவுட் படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு

கொரோனா 2-வது அலை உலகம் முழுவதும் உக்கிரமாக பரவி வருகிறது. சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-04-18 22:45 GMT
தமிழகத்தில் தியேட்டர்களில் பார்வையாளர்கள் 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் உலக அளவில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களின் வசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. சில படங்கள் நஷ்டத்தையும் சந்தித்து உள்ளன. 'காஸ்ஸில்லா வெர்சஸ் காங்' படத்தின் வசூலும் கொரோனாவால் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திரைக்கு வர தயாராக இருந்த வொண்டர் வுமன், ஸ்கார்லெட் ஜோன்சனின் பிளாக் விடோ படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. டாம் குரூஸ் நடித்து 1986-ல் வெளியான டாப் கன் படத்தின் இரண்டாம் பாகம் 34 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகி கடந்த ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்து பின்னர் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். கொரோனா குறையாததால் மீண்டும் வருகிற ஜூலை மாதத்துக்கு தள்ளி வைத்தனர். தற்போது 2-வது அலை பரவல் காரணமாக டாப் கன் 2-ம் பாகம் நவம்பர் மாதத்துக்கு தள்ளிப் போகிறது.. இதுபோல் டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாஸிபில் -7 படத்தை அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்