நடிகையின் முகநூல் கணக்கு முடக்கம்

தமிழில் சேரன் நடித்த ராஜாவுக்கு செக் படத்தில் நடித்தவர் நந்தனா வர்மா. மலையாளத்தில் ஸ்பிரிட், ரிங் மாஸ்டர், சண்டே ஹாலிடே, வாங்கு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.;

Update:2021-04-22 07:22 IST
இவர் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் நந்தனா வர்மாவின் முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சியான நந்தனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எனது முகநூல் கணக்கில் ஊடுருவி முடக்கி உள்ளனர். முகநூல் பக்கத்தில் சில விஷயங்களையும் பதிவிட்டுள்ளனர்.

அதை பார்த்து எனக்கு நிறைய அழைப்புகளும், குறுந்தகவல்களும் வந்தன. அதன்பிறகுதான் மர்ம நபர்கள் ஊடுருவியது தெரியவந்தது. அந்த பதிவுகளை நான் வெளியிடவில்லை. எனது முகநூல் பக்கத்தில் வெளியான பதிவுகள் மூலம் யாரேனும் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அந்த பதிவை நானோ, எனது குழுவினரோ வெளியிடவில்லை''. என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகைகள் ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட சில நடிகைகளின் முகநூல் கணக்குகளை மர்ம நபர்கள் முடக்கினார்கள்.

மேலும் செய்திகள்