தனுஷ் மார்க்கெட் உயர்ந்தது

தனுஷ் நடித்து வெளிவந்த ‘அசுரன்’ படம், தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.;

Update:2021-04-30 16:42 IST
அந்த படத்தின் வசூல் சாதனையை அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘கர்ணன்’ படம் முறியடித்து இருக்கிறது. தனுஷ் நடித்த படங்களிலேயே மிக அதிக வசூல் செய்ததும் இந்த படம்தான்.

படத்தின் மொத்த தயாரிப்பு செலவு ரூ.37 கோடி. வியாபாரம் ஆனது, ரூ.52 கோடி. இதுவரை வசூல் செய்திருப்பது ரூ.54 கோடி. இதன் மூலம் தனுஷ் மார்க்கெட் நிலவரம் உயர்ந்து இருக்கிறது.

‘கர்ணன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து இருப்பவர், ரஜீஷா விஜயன். படத்தை இயக்கியவர், மாரி செல்வராஜ். தயாரித்தவர், எஸ்.தாணு.

மேலும் செய்திகள்