ராட்சத குரங்கை வடிவமைக்க 100 என்ஜினீயர்கள்

இந்திய திரையுலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு படத்துக்காக நவீன தொழில்நுட்பத்தில், ராட்சத குரங்கு வடிவமைக்கப்படுகிறது. அந்த படத்தின் பெயர், ‘கபி’.

Update: 2021-04-30 22:45 GMT
“ஒரு பிரச்சினை தொடர்பாக குரங்கு செய்யும் சாகசங்களே படத்தின் கதை. இமயமலையில் இருந்து அந்த குரங்கு புறப்பட்டு கடல் தாண்டி செய்யும் வீரதீர சாகசங்கள் படம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்” என்கிறார்கள், படத்தின் கதாசிரியர்கள் கவுசிக்கரா, என்.ராமசாமி. (இருவரும் சேர்ந்து கதை எழுதியிருக்கிறார்கள்.) கோகுல்ராஜ் பாஸ்கர் டைரக்டு செய்கிறார்.

ராட்சத குரங்கை வடிவமைக்கும் வேலையில் நூறு என்ஜினீயர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் 100 படங்களை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், லிப்ரா புரொடக்சனுடன் கூட்டு சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

மேலும் செய்திகள்