கொரோனா தொற்று; பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனாவால் மரணம் அடைந்தார்.

Update: 2021-05-08 05:28 GMT
இவர் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1981-ல் திரைக்கு வந்த கல்தூண் படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக நடித்து பிரபலமானார். ரஜினிகாந்தின் ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது. தாயில்லா குழந்தை, பேர் சொல்ல ஒரு பிள்ளை, வேலை கிடைச்சிருச்சு, வெள்ளிக்கிழமை விரதம் உள்பட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிக படங்களில் வில்லனாக வந்தார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 50 ஆண்டுகளாக படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சென்னையில் வசித்து வந்த கல்தூண் திலக்குக்கு சில 
தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்தும் பலன் இன்றி உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 78. சமீபத்தில் டைரக்டர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா ஆகியோர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தனர். இரு தினங்களுக்கு முன்பு பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் இறந்தார். கொரோனாவுக்கு திரையுலகினர் அடுத்தடுத்து பலியாவது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்