ஓ.டி.டி.யில் வரும் வைபவ் 2-வது படம்

மலேஷியா டு அம்னீஷியா என்ற படம் இந்த மாதம் இறுதியில் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளனர்.;

Update:2021-05-11 02:35 IST
வைபவ், வாணிபோஜன் ஜோடியாக நடித்துள்ள மலேஷியா டு அம்னீஷியா என்ற படம் இந்த மாதம் இறுதியில் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளனர். இதில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை ராதா மோகன் டைரக்டு செய்துள்ளார். இவர் அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர். முழு நீள நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே வைபவ் நடித்த லாக்கப் படமும் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கொரோனா 2-வது அலையால் மேலும் பல படங்கள் ஓ.டி.டி. பக்கம் திரும்பி உள்ளன. விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், சிவகார்த்திகேயனின் டாக்டர், திரிஷாவின் ராங்கி, ஹன்சிகா நடித்துள்ள மஹா ஆகிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கின்றன.

அஜித்குமாரின் வலிமை படத்தை வாங்கவும் ஓ.டி.டி. தளங்கள் விலை பேசுவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழுவினர் தியேட்டரில் வெளியிடுவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்