கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்காதது ஏன்? விஜய் ஆண்டனி விளக்கம்

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய விஜய் ஆண்டனி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ரசிகர்களின் கேள்விகளும், அவற்றுக்கு விஜய் ஆண்டனி அளித்த பதில்களும் வருமாறு.

Update: 2021-06-13 00:59 GMT
‘‘நீங்கள் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய காலத்தில், உங்கள் படங்களுக்கு நீங்களே இசையமைத்து வந்தீர்கள். இப்போது உங்கள் படங்களுக்கு நீங்கள் இசையமைப்பதில்லையே, ஏன்?’’

‘‘இப்போது இளம் இசையமைப்பாளர்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பதற்காகவே இசையமைப்பதை குறைத்துக்கொண்டேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது இசையமைத்து வருகிறேன். தற்போது, பிச்சைக்காரன் 2 படத்துக்கு இசையமைத்து வருகிறேன்.’’

‘‘உங்கள் படங்கள் பெரும்பாலும் கனமான கதையம்சம் கொண்டதாக இருக்கிறதே...எப்படி?’’

‘‘கனமான கதைகள் எனக்கு அமைந்து விடுகின்றன. திரைக்கதைகளின் மீதமான ஆர்வம், நல்ல திரைக்கதைகளை தேர்வு செய்ய உதவுகிறது.’’

‘‘கோடியில் ஒருவன் படத்தை பற்றி சொல்லுங்கள்?’’

‘‘கோடியில் ஒருவன் படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர், விஜயராகவன். கதாநாயகி, ஆத்மிகா. ‘பிச்சைக்காரன்’ படத்தில் என் கதாபாத்திரம் எல்லா தரப்பினரையும் எவ்வாறு கவர்ந்ததோ, அவ்வாறே கோடியில் ஒருவன் கதாபாத்திரமும் கவரும். இது ஜனரஞ்சகமான படம். எனக்கும், படம் பார்ப்பவர்களுக்குமான ஒருங்கிணைப்பை பலப்படுத்தும். அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் பிடிக்கும்.’’

‘‘காதல் மற்றும் பாடல் காட்சிகளில் கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிப்பதில்லையே, ஏன்?’’

‘‘கதைக்கு தகுந்த மாதிரியே நடிக்கிறேன். அந்த நாகரிகத்துக்கு உட்பட்டு கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்கிறேன்.’’

மேலும் செய்திகள்