3 தேசிய விருது பெற்றவர் படமாகும் டான்ஸ் மாஸ்டர் வாழ்க்கை

இந்தி திரையுலகின் புகழ் பெற்ற நடன இயக்குனர் சரோஜ்கான். இவர் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள் படங்களிலும் பணியாற்றி உள்ளார்.;

Update:2021-07-05 05:30 IST
இந்தி திரையுலகின் புகழ் பெற்ற நடன இயக்குனர் சரோஜ்கான். இவர் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள் படங்களிலும் பணியாற்றி உள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த தாய்வீடு படத்தில் இடம்பெற்ற உன்னை அழைத்தது கண்... பாடலுக்கு நடனம் அமைத்து இருந்தார். இருவர், சிருங்காரம் ஆகிய படங்களுக்கும் நடனம் அமைத்தார். 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். இந்தியில் அனில்கபூர் ஶ்ரீதேவி நடித்து 1987-ல் வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ படம் சரோஜ்கானுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதில் இடம் பெற்ற ‘தக் தக் லகா, ஹவா ஹவா’ ஆகிய பாடல்களில் அவர் அமைத்திருந்த நடன அசைவு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மாதுரி தீட்சித்தை புகழ் உச்சிக்கு கொண்டு சென்ற ‘ஏக் தோ தீன்’ பாடலுக்கும் சரோஜ்கான் நடனம் அமைத்து இருந்தார். 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்து இருக்கிறார். கடந்த 2020 ஜூலை மாதம் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கையை சினிமா படமாக எடுப்பதாக அவரது மகனும், நடன இயக்குனருமான ராஜூகான் தற்போது அறிவித்து உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்