கங்குலி வாழ்க்கை சினிமா படமாகிறது ரன்பீர் கபூர் நடிப்பாரா?

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக வந்து வெற்றி பெற்றது.

Update: 2021-07-15 00:07 GMT
சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையையும் ஆவண படமாக எடுத்து வெளியிட்டனர். பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த மிதாலி ராஜ் வாழ்க்கை படமாகி வருகிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கையையும் படமாக எடுக்க உள்ளனர். இதுகுறித்து கங்குலி கூறும்போது, “எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ஒப்புதல் அளித்துள்ளேன். இயக்குனர் யார் என்பதை இப்போது சொல்ல இயலாது. இன்னும் சில தினங்களில் அனைத்தும் முடிவாகிவிடும்'' என்றார்.

இந்த படம் அதிக பொருட் செலவில் தயாராகிறது. கங்குலியின் சிறுவயது வாழ்க்கையில் இருந்து பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டது வரை உள்ள சம்பவங்கள் படத்தில் இடம்பெற உள்ளது. இதில் கங்குலி கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கங்குலி 2000-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பேட்டிங்கில் வல்லவரான அவர் ஏராளமான சிக்சர், பவுண்டரிகள், சதங்கள் அடித்து கவனம் பெற்றவர். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் இந்திய அணி 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 வெற்றிகளை பெற்றுள்ளது. தற்போது அவர் பி.சி.சி.ஐ. தலைவராக பதவி வகிக்கிறார்.

மேலும் செய்திகள்