இளையராஜா இசையில் முதல் காதலை கொண்டாடும் படம்

உலக திரைப்பட வரலாற்றில், மிக அதிக படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர், இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1,100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்து இருக்கிறார்.

Update: 2021-07-16 09:59 GMT
அவரது இசைக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். பாடல்கள் பதிவானதுமே படங்கள் வியாபாரமாகி விட்ட வரலாறுகள் நிறைய உண்டு. அந்த வகையில், இளையராஜாவின் மென்மையான இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘நினைவெல்லாம் நீயடா’ என்ற படம் உருவாகிறது. இந்த படத்தை ராயல் பாபு தயாரிக்கிறார். சிலந்தி, ரணதந்திரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

கதாநாயகனாக பிரஜன் நடிக்க, கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் மனோபாலா, காளி வெங்கட், மயில்சாமி, செல் முருகன், மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் ஆதிராஜன் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மறக்க முடியாதது, முதல் காதல். இளைஞர்களுக்கு மீசை அரும்பும் முன்பே ஆசை அரும்பும் பள்ளிக்கூட காதல், நினைக்கும் போதெல்லாம் சிலிர்க்க வைக்கும்’’ என்றார்.

மேலும் செய்திகள்