கதை நாயகனாக கருணாஸ்

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்த கருணாஸ், அடுத்து நகைச்சுவை நாயகனாக உயர்ந்தார்.;

Update:2021-07-23 06:57 IST
நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்த கருணாஸ், அடுத்து நகைச்சுவை நாயகனாக உயர்ந்தார். அரசியலில் இருந்து கொண்டே அவர் படங்களில் நடித்து வருகிறார். அவர் கதை நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பெயர், ‘ஆதார்.’ இதில் அவருக்கு ஜோடியாக ரித்விகா நடிக்கிறார்.

இவர்களுடன் அருண்பாண்டியன், ‘வத்திக்குச்சி’ பட புகழ் திலீப், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், மனிஷா யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘அம்பாசமுத்திரம் அம்பானி, ’ ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் டைரக்டு செய்கிறார்.

மேலும் செய்திகள்