மகனுடன் விக்ரம் நடிக்கும் படம்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இது விக்ரமுக்கு 60-வது படம்.;

Update:2021-08-10 13:41 IST
படத்தில் விக்ரமும், துருவ் விக்ரமும் தந்தை மகனாகவே நடிப்பதாக கூறப்படுகிறது. சிம்ரன், வாணிபோஜன் கதாநாயகிகளாக வருகிறார்கள். படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்கினர். பின்னர் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடந்தது. தற்போது 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

துருவ் விக்ரம் தனது காட்சிகளை சில தினங்களுக்கு முன்பு நடித்து முடித்துவிட்டார். விக்ரம் கொல்கத்தாவில் நடக்கும் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் பெயரை அறிவிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்