பேய் படத்தில் பிரபுதேவா

திகில், பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நல்ல வசூலும் குவிகிறது. இதனால் முன்னணி நடிகர்கள் பேய் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளும் பேய் கதைகளில் நடித்துள்ளனர்.;

Update:2021-08-10 14:30 IST
அதிகமான பேய் படங்களும் தயாரிப்பில் உள்ளன. சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை 3-ம் பாகமாக தயாராகும் பேய் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் பிரபுதேவாவும் பேய் படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார்.

ஏற்கனவே திகில் கதையம்சத்தில் தயாரான தேவி படத்திலும் பிரபுதேவா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா நடித்துள்ள பொன்மாணிக்கவேல் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தேள், யங் மங் சங் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்