சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த கவுதம் மேனன்

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;

Update:2021-09-19 23:53 IST
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டான்’. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவுதம் மேனன் - சிவகார்த்திகேயன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்