நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்

தந்தையை இழந்து தவிக்கு நடிகை நந்திதாவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.;

Update:2021-09-20 22:58 IST
நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நந்திதாவின் சமீபத்திய பதிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அந்த பதிவில் “எனது அப்பா சிவசாமி (வயது 54) நேற்று காலமானார் என்பதை எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நடிகை நந்திதாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்