கையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலா பால்... வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.;

Update:2021-09-22 23:06 IST
தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடுகிறார். அமலாபாலின் சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்