‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.;

Update:2021-09-24 23:54 IST
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஓவியா, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஸ்வதீஸ் எம்.எஸ் இயக்க உள்ளார். தர்ம பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

மேலும் செய்திகள்