‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ பட பிரபலம்

வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.;

Update:2021-10-18 23:08 IST
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்க உள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

இந்நிலையில், ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெடின், சமீபத்தில் நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்