அருண் விஜய்யின் ‘யானை’ படப்பிடிப்பு முடிவடைந்தது

அருண் விஜய் நடிக்க, ஹரி டைரக்டு செய்த ‘யானை’ படத்தின் படப்பிடிப்பும் தீபாவளியுடன் முடிவடைந்தது.;

Update:2021-11-07 14:58 IST
அருண் விஜய்க்கு கை நிறைய படங்கள் உள்ளன. அவர் நடித்த ‘பார்டர், ‘சினம்’ ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்தன. ‘பார்டர்’ படத்தை அறிவழகன் இயக்கியிருக்கிறார். ‘சினம்’ படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி உள்ளார்.

அடுத்து அருண் விஜய் நடிக்க, ஹரி டைரக்டு செய்த ‘யானை’ படத்தின் படப்பிடிப்பும் தீபாவளியுடன் முடிவடைந்தது. இந்த படங்களில் ‘பார்டர்’ முதலில் திரைக்கு வரும். அடுத்து, ‘சினம்’ படம் வரும். அதையடுத்து, ‘யானை’ வரும் என்று அருண் விஜய் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்