மணிரத்னத்தின் பேவரைட் இயக்குனருடன் கூட்டணி அமைத்த மம்முட்டி

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.;

Update:2021-11-08 23:45 IST
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என சிறந்த படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இந்திய அளவில் கொண்டாடப்படும் இயக்குனரான மணிரத்னத்தின் பேவரைட் இயக்குனரும் லிஜோ ஜோஸ் தான். அவர் இயக்கிய அனைத்து படங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என மணிரத்னம் ஒரு நிகழ்வில் கூறியிருந்தார்.

இந்நிலையில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என பெயரிட்டுள்ளனர். பழனியை மையப்படுத்தி இந்தப் படம் தயாராக உள்ளது. இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

மேலும் செய்திகள்