நடிகர் சௌந்தரராஜா - தமன்னா தம்பதிக்கு குழந்தை பிறந்தது

மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தரராஜா, தன் குழந்தைக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.;

Update:2021-11-15 22:48 IST
தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தை பிறந்தது தனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றார். மேலும் மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தரராஜா, தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.

மேலும் செய்திகள்