விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.;

Update:2021-11-26 22:13 IST
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்